Rated 1 out of 5 stars

for long time tamil key add on is not supporting latest ff. please fix it asap. ( seems like no body is working on it )

குறும்பன்,

கூகிள் தேடல், கூகிள் ப்ளஸ் உள்ளிட்ட சில தளங்கள் தவிர மற்ற எல்லா வலைத் தளங்களிலும் எல்லா ஃபயர்ஃபாக்ஸ் வெளியீட்டிலும் தமிழ்விசை சரியாக பணி செய்கிறது.

Rated 3 out of 5 stars

Firefox ver 6 மற்றும் தற்போதைய 7ம் பதிப்புகளில் (5லும் இச்சிக்கல் இருந்ததென்று நினைக்கிறேன்) வழு உள்ளது. நான் Googleஐ தான் என் முகப்பு பக்கமாக வைத்துள்ளேன், தேடல் பெட்டியில் எழுதினால் (தமிழ் & ஆங்கிலம்) எல்லாம் மறைந்தே வருகிறது ஆனால் எல்லா தட்டல்களும் தேடல் பெட்டியில் பதிவாகிறது. தேடல் பெட்டியை சுற்றி நீல வண்ணத்தில் கட்டம் கட்டப்படும் அப்போது எதை அடித்தாலும்\எழுதினாலும் பெட்டியில் தெரியாது (both XP and Vista). தமிழ் விசை காரணமாகவே நான் Firefox உலாவியை பயன்படுத்துவது. தமிழில் தேடலாம் என்றால் இப்பிரச்சனை பெரும் தடைக்கல்லாக உள்ளது. விக்கிப்பீடியாவில் உள்ள தட்டச்சு வசதியை வைத்து தான் தமிழ் தட்டச்சு. இதை எழுதுவதும் விக்கி தட்டச்சு வசதியை கொண்டுதான். இவ்வழுவை நீக்கி என்னை போன்ற தமிழ்விசை Firefox ஆர்வலர்களுக்கு உதவவேண்டும்.

குறும்பன்,

உங்கள் கருத்துக்கு நன்றி. இச்சிக்கலை களைய நிரல் மாற்றங்கள் செய்து வருகிறோம். கண்டிப்பாக அடுத்த வெளியீட்டில் இச்சிக்கல் களையப்பட்டிருக்கும்.